குப்பை எரிப்பால் சுகாதாரம் பாதிப்பு
குப்பை எரிப்பால் சுகாதாரம் பாதிப்பு
குப்பை எரிப்பால் சுகாதாரம் பாதிப்பு
ADDED : செப் 03, 2025 09:27 AM

பாலமேடு ; பாலமேடு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், கடை, திருமண மண்டபங்கள், ஓட்டல்களில் சேகரிக்கும் குப்பையை மயானம் அருகே உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி தரம் பிரிக்க வேண்டும்.
ஆனால் குப்பை கழிவுகளை ஆக்கிரமிப்பில் உள்ள மயானத்தில் கொட்டி எரிக்கின்றனர். மயானத்தில் குப்பை மலை போல் குவித்து எரிக்கப்படுவதால் 24 மணிநேரமும் இப்பகுதி புகை மண்டலமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் மஞ்சமலை ஆற்றுக்குள் குறிப்பிட்ட துாரத்திற்கு குப்பை, கட்டட கழிவுகளை கொட்டி மேடாக ரோடு உயரத்திற்கு மாறி உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் தீ வைக்கும் போது காய்ந்த செடிகள், புதர்கள், மரங்கள் ஆள் உயரத்துக்கு எரிகிறது. மயான ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குப்பையை கொட்டுகின்றனர். இதனால் விவசாய நிலம், கோயில்களுக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். சுகாதார சீர்கேடு நிலவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.