ADDED : பிப் 24, 2024 04:35 AM

அலங்காநல்லுார் : பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வெற்றிக்காக, அலங்காநல்லுார் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் உள்ள ஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு யாகம் நடந்தது.
முன்னதாக புனிதநீர் குடங்களுக்கு தீபாராதனை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வியும், பூர்ணாகுதி பூஜை வழிபாடு செய்தனர்.
சுவாமி அம்மனுக்கு இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், மலர்களால் அலங்காரம் நடந்தது. பள்ளி, கல்லுாரி மற்றும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு பேனா மாலை அணிவிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன், வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.