ADDED : ஜூலை 01, 2025 03:03 AM
மதுரை: ரயில்வே ஸ்டேஷன் வந்த பாண்டியன் விரைவு ரயிலின் (12637) முதல் வகுப்பு பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை ரோந்து சென்ற போலீசார் கைப்பற்றினர்.
சென்னை தில்லை கங்கா நகரைச் சேர்ந்த தமிழ்வாணன், தகுந்த அடையாளம் கூறியதால், பையில் இருந்த ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.