/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை காமராஜ் பல்கலையில் அழகு கலை பயிற்சி துவக்கம் மதுரை காமராஜ் பல்கலையில் அழகு கலை பயிற்சி துவக்கம்
மதுரை காமராஜ் பல்கலையில் அழகு கலை பயிற்சி துவக்கம்
மதுரை காமராஜ் பல்கலையில் அழகு கலை பயிற்சி துவக்கம்
மதுரை காமராஜ் பல்கலையில் அழகு கலை பயிற்சி துவக்கம்
ADDED : ஜூலை 01, 2025 03:03 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை வயதுவந்தோர் தொடர்கல்வி விரிவாக்கத்துறை சார்பில் பெண்களுக்கான மூன்று மாதம் அழகு கலை பயிற்சி சேர்க்கை துவங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாத, அதற்கும் மேல் படித்த ஆர்வமுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி நேரம் காலை 10:00 மணி - 1:00 மணி வரை. பல்கலை சார்பில் சான்று அளிக்கப்படும்.
இப்பயிற்சி முடிக்கும் பெண்கள் சொந்தமாக அழகு நிலையம் துவக்கலாம், நட்சத்திர ஓட்டல் அழகு நிலையங்களில் பணியாற்றலாம். நேரடி சேர்க்கை, முன்னுரிமை பெற 'இயக்குநர், வயதுவந்தோர் தொடர்கல்வி துறை, மதுரை காமாரஜ் பல்கலை மாலை நேரக் கல்லுாரி வளாகம், அழகர்கோவில் ரோடு, மதுரை' என்ற முகவரியில் விண்ணப்பம் பெறலாம். 99943 90196ல் தொடர்புகொள்ளலாம் என இயக்குநர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.