/உள்ளூர் செய்திகள்/மதுரை/கைத்தறிக் கண்காட்சி ஜன.17 வரை நீட்டிப்புகைத்தறிக் கண்காட்சி ஜன.17 வரை நீட்டிப்பு
கைத்தறிக் கண்காட்சி ஜன.17 வரை நீட்டிப்பு
கைத்தறிக் கண்காட்சி ஜன.17 வரை நீட்டிப்பு
கைத்தறிக் கண்காட்சி ஜன.17 வரை நீட்டிப்பு
ADDED : ஜன 05, 2024 04:23 AM
மதுரை ; மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் நடக்கும் காட்டன் பேப் 2023 - 2024 கைத்தறிக் கண்காட்சி, விற்பனை ஜன., 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
'காட்டன் பேப்' அமைப்பாளர் ஜாவித் தெரிவித்துள்ளதாவது:
இக்கண்காட்சியில் 22 மாநிலங்களில் இருந்து 125 கைவினைக் கலைஞர்கள் தயாரித்த கைத்தறி, கைவினைப் பொருட்கள் 150 கவுன்டர்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நெசவாளர்கள், பட்டு கூட்டுறவு சங்கங்கள் தயாரித்த பட்டுச்சேலைகளும் விற்பனைக்கு உள்ளது.
ஆரணி பட்டு சேலைகள், கிரேப் ஜார்ஜெட் சில்க், ஷிபான் சில்க் உட்பட ஏராளமான சேலை ரகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
தரகர்கள் இல்லாமல் தயாரிப்பாளர்களே நேரடியாக விற்பனை செய்வதால் மக்கள் உரிய விலையில் வாங்கி பயனடையலாம். ஜன., 7 வரை நடப்பதாக இருந்த கண்காட்சி 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.