ADDED : ஜன 04, 2024 02:36 AM

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் 35 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த கோரியும், மாற்றுத்திறனாளிகளுக்கு பி.எச்.எச்., ரேஷன் கார்டுகளை ஏ.ஏ.ஒய்., கார்டுகளாக மாற்றி கொடுக்க கூறியும் வலியுறுத்தினர். அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
தாசில்தார் சரவணன் கூறுகையில், ''ஏ.ஏ.ஒய்., கார்டுகளுக்கு மத்திய அரசின் அரிசி ஒதுக்கீடு தனியாக வரும். தற்போது 300க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் இணைய கேட்பதால் உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும்'' என்றார்.