ADDED : ஜன 05, 2024 04:12 AM

மதுரை : தேனி மாவட்டத்தில் 19 வயதுக்குட்பட்ட தமிழக ஹேண்ட் பால் அணிக்கான போட்டித்தேர்வு நடந்தது. 32 அணிகள் பங்கேற்றதில் மதுரை மாவட்ட அணி வெண்கல பதக்கம் வென்றது.
தமிழக அணிக்கான தேர்வில் அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள் சத்யா, ஈஸ்வரமூர்த்தி, அரவிந்தோ மீரா பள்ளி மாணவர் ஜிஷ்ணு மோகன், சவிதா பொறியியல் கல்லுாரி மாணவர் ரிஷி ஆகியோர் வெற்றி பெற்றனர். ஜன., 9 முதல் 13 வரை ராஜஸ்தானில் நடக்கும் தேசிய போட்டிக்கு தமிழக அணி சார்பில் இவர்கள் பங்கேற்கின்றனர். மாவட்ட பயிற்சியாளர் குமரேசன், ஹேண்ட்பால் சங்கத்தலைவர் கண்ணன், செயலாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டினர்.