ADDED : செப் 23, 2025 04:29 AM
உசிலம்பட்டி: 'ஜி.எஸ்.டி., தேவையில்லாத ஒன்று. எங் களிடமே வரியை பெற்றுக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறது மத்திய அரசு' என தேனி எம்.பி., தங்கத் தமிழ்ச் செல்வன் கூறினார்.
உசிலம்பட்டி அருகே வி.பெருமாள் பட்டியில் ரூ.1.77 கோடி செலவில் ஆறு வகுப்பறைகளுடன் கட்டப்பட்ட அரசு கள்ளர் துவக்கப்பள்ளியை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.
பள்ளியில் நடந்த நிகழ்வில் தங்கத் தமிழ்ச்செல்வன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அவர் கூறியதாவது:
துவக்கத்தில் இருந்து தி.மு.க., மற்றும் இண்டி கூட்டணி வைக்கும் கோரிக்கையே ஜி.எஸ்.டி., நாட்டுக்கு தேவையில்லை என்பதுதான். ஜி.எஸ்.டி., வரி போடுவதாக இருந்தால் பெட்ரோல், டீசலுக் கும் போடச் சொல் கிறோம்.
சாதாரண மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., போட்டு வரியை வாங்குகின்றனர். வரி நான்காக இருந்ததை 2 ஆக கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். ஆடம்பர பொருட்கள், புகையிலைக்கு 40 சதவீத ஜி.எஸ்.டி., வரியை கூட்டு கின்றனர். இருந்தாலும் எங்களுக்கு ஜி.எஸ்.டி., தேவையில்லாத ஒன்று.
மத்திய அரசு எங் களிடம் வரியை வாங்கி வாழ்கிறது. வரி கொடுக்கும் முக்கிய மாநிலமான தமிழ்நாட்டுக்கான நிதியை கொடுக்க மறுக்கின்றனர்.
2026 தேர்தலில் போட்டி, நான்கு முனையா, ஐந்து முனையா எனத் தெரியாது. எத்தனை முனைப் போட்டி வந்தா லும் தி.மு.க., கூட்டணியே வெற்றி பெறும். தொடர்ந்து 2 வது முறை ஸ்டாலின் முதல்வராவர்.
உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்துள்ளோம். அதிக மழை பெய்து தண்ணீர் நிரம்பினால் அரசாணை வழங்கி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.