/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரேஸ்கோர்ஸ் காலனியில் அரசு நிலம் மீட்புரேஸ்கோர்ஸ் காலனியில் அரசு நிலம் மீட்பு
ரேஸ்கோர்ஸ் காலனியில் அரசு நிலம் மீட்பு
ரேஸ்கோர்ஸ் காலனியில் அரசு நிலம் மீட்பு
ரேஸ்கோர்ஸ் காலனியில் அரசு நிலம் மீட்பு
ADDED : ஜன 04, 2024 02:39 AM
மதுரை: மதுரை புதுார் தாமரைத்தொட்டி அருகில் உள்ள ரேஸ்கோர்ஸ் காலனியில் மதுரா மில்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அரசு நிலம் விதிமீறல் காரணமாக மீண்டும் மீட்கப்பட்டது.
நில ஒப்படைப்பு விதிமீறல் காரணமாக சென்னை நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஆணைப்படி ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கலெக்டர் சங்கீதா உத்தரவின்படி மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியில் உள்ள நிலம் மீண்டும் எடுத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசுக்கு சொந்தமான இந்நிலத்தில் அத்துமீறி நுழையக் கூடாது என வருவாய்த்துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.