ADDED : ஜன 29, 2024 05:58 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், நகர் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
நகர் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவக்குமார், வட்டார தலைவர் பாலாஜி, தனுஷ்கோடி முன்னிலை வகித்தனர். செயலர் பாலசுந்தரம் வரவேற்றார். கோவை சங்கரா கண்மருத்துவமனை டாக்டர் மார்டின் தலைமையில் செவிலியர்கள் மாரியம்மாள், சூர்யா, கற்பக ஜோதி, மாலா, ஜெயகர் கண் பரிசோதனை செய்தனர். சங்க பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.