ADDED : ஜன 31, 2024 07:01 AM
சோழவந்தான் : வாடிப்பட்டியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், அரிமா சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவக்குமார், வட்டாரத் தலைவர் பாலாஜி, தனுஷ்கோடி, பழனிச்சாமி, பாபநாசம் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலசுந்தரம் வரவேற்றார். நிர்வாகி பாபு சரவணன் துவக்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் மார்டின் தலைமையில் பரிசோதிக்கப்பட்டது.