ADDED : மே 10, 2025 06:08 AM
மதுரை; மதுரையில் வணிகவரித்துறை இணைப்பு கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. விரைவில் இணை ஆணையர் (சட்டம்), உதவி ஆணையர் (மாநில வரி), அலுவலக வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதியுடன் கூடிய புதிய கட்டடம் ரூ. 6.34 கோடி செலவில் கட்டப்படும் என வணிக வரி, பதிவுத்துறைக்கான மானிய கோரிக்கை அறிவிப்பில் இடம்பெற்று இருந்தது.
அமைச்சர் மூர்த்தி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.