
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஜூன் 9ல் பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜூன் 10ல் சுவாமி பட்டுப் பல்லக்கில் எழுந்தருளினார்.
நேற்று முன் தினம் இரவு பூப்பல்லக்கில் முக்கிய வீதிகளில் சுவாமி வீதி உலா வந்தார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.