ADDED : செப் 03, 2025 05:43 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி கீழப்புதுார் வார்டு 8, ஒச்சாத்தேவர் தெருவில் கழிவுநீர் செல்லும் கால்வாய் துார்ந்து போய் உள்ளது.
கழிவு நீர் குடிநீரில் கலந்து வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என அந்த தெரு மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் பேராட்டத்திற்கு வந்தனர். அவர்களுடன் நகராட்சி கமிஷனர் இளவரசன், பொறியாளர் சசிகுமார் நேரில் ஆய்வு செய்து சீரமைத்து தருவதாக சமரசம் செய்தனர்.