/உள்ளூர் செய்திகள்/மதுரை/பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்
ADDED : ஜன 01, 2024 05:43 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வேளாண் விரிவாக்க மையத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்ற வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் நெல், வாழை, காய்கறிகள், கடலை, மல்லிகை பயிரிட்டுள்ளனர். பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதம் செய்து வருவதால் ஐம்பது சதவீதம் சாகுபடி குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
பெரிய கூடக்கோயில் ராமர்
எந்த பயிரை சாகுபடி செய்தாலும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி விடுகின்றன. கடலை, கிழங்கு வகைகள், வாழை பயிரிட்டால் பூமியை ஒரு அடிக்குகீழ் தோண்டி வேருடன் சாய்த்து விடுகின்றன. காட்டுப்பன்றிகள் கூட்டமாக வருகின்றன. காவலுக்கு இருப்போர் தடுத்தால் மிரட்டி விரட்டுகின்றன. எனவே, பன்றிகளைப் பார்த்தால் பயமாக உள்ளது. தோட்டத்தில் வேலி அமைத்தாலும் சேதப்படுத்தி பயிர்களை அழித்துவிடுகின்றன. முன்பு இரவு நேரங்களில் மட்டுமே வந்த பன்றிகள், தற்போது எந்த நேரமும் வருகின்றன.
காட்டுப்பன்றிகளுக்கு பயந்து 7 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியவில்லை. வருமானமின்றி தவிக்கிறோம். கூடக்கோயில் மட்டுமின்றி நெடுமதுரை, எலியார்பத்தி, பாறைப்பத்தி, ஒ. ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், கொம்பாடி, நல்லூர் பகுதிகளிலும் பன்றிகளின் தொல்லை உள்ளது.
பன்றிகளால் ஆண்டுதோறும் விவசாயிகள் நஷ்டம் அடைகிறோம். இது தொடர்ந்தால் ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். தண்ணீர் நிரம்பியதால் கண்மாய் அருகே காலியிடங்களுக்கு இடம் மாறியுள்ள பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை என்றார்.