/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் சாலை மறியல் நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் சாலை மறியல்
நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் சாலை மறியல்
நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் சாலை மறியல்
நெல் கொள்முதல் நிறுத்தம் விவசாயிகள் சாலை மறியல்
ADDED : ஜூன் 26, 2025 01:28 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்தில் திருமங்கலம் பிராதன கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் நெல் அறுவடை நடந்து வருகிறது. வாலாந்துார் அருகே நாட்டாபட்டி கிராமத்திலும் 100 ஏக்கருக்கும் மேல் நெல் அறுவடை நடந்துள்ளது.
இங்குள்ள அரசு கொள்முதல் நிலையத்தில் 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்துள்ளனர். விவசாயிகள் அறுவடையான நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கின்றனர். திறந்த வெளியாக இருப்பதால் மழை வந்தால் நெல் சேதமடைய வாய்ப்புள்ளதால், கொள்முதல் பணிகளை மீண்டும் துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நேற்று காலை 10:30 மணியளவில் நாட்டாபட்டியில் விவசாயிகள் 15 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.