/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குடிநீரின்றி தவிக்கும் 4 கிராம மக்கள் குடிநீரின்றி தவிக்கும் 4 கிராம மக்கள்
குடிநீரின்றி தவிக்கும் 4 கிராம மக்கள்
குடிநீரின்றி தவிக்கும் 4 கிராம மக்கள்
குடிநீரின்றி தவிக்கும் 4 கிராம மக்கள்
ADDED : ஜூன் 26, 2025 01:29 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா பகுதி முழுவதும் வைகை கூட்டு குடிநீர் திட்டம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு மாதமாக சாலிச்சந்தை, பி.அம்மாவிலக்கு பி. ஆண்டிபட்டி பி.சொக்கம்பட்டி பகுதிகளுக்கு குடிநீர் செல்லாததால் இப்பகுதி மக்கள் 4 கி.மீ., துாரம் உள்ள பேரையூருக்கு தண்ணீர் எடுக்க அலைகின்றனர்.
கூட்டுக் குடிநீர் திட்ட ஊழியர்கள் கடந்த வாரம் பேரையூர் கண்மாய் பகுதி பைப் லைன்களை சரி செய்ய முயற்சித்தனர். ஆனால் பலனிக்கவில்லை. கண்மாய் புதர் மண்டி கிடப்பதால் பைப் லைனை அவர்களால் சரி செய்ய முடியவில்லை. டி. கல்லுப்பட்டி யூனியன் நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் பலனில்லை.