ADDED : பிப் 11, 2024 12:45 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள மானாவாரி பகுதி கிராமங்களில் விவசாயிகள் கோடை நெல் நடவு செய்ய நிலங்களை தயார்படுத்தும் பணியை துவக்கி உள்ளனர்.
அவர்கள் கூறுகையில், ''கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் நடவு செய்து அறுவடை செய்துள்ளனர். கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் தற்போது நிலங்களை உழுது தயார்படுத்துகின்றனர். பலர் நாற்று பாவியுள்ளனர்'' என்றனர்.