Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு டீசல் கேனுடன் வந்த விவசாயி

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு டீசல் கேனுடன் வந்த விவசாயி

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு டீசல் கேனுடன் வந்த விவசாயி

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு டீசல் கேனுடன் வந்த விவசாயி

ADDED : செப் 09, 2025 04:17 AM


Google News
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் விடுபடாமல் சமூக பாதுகாப்பை கட்டமைக்க 'உரிமைகள்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் செல்டர் தொண்டு நிறுவனம் இதனை செயல்படுத்துகிறது.

இதற்காக ஒன்றியங்கள் தோறும் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட உள்ளது. இதில் சிறப்பாசிரியர்கள், தசைப்பயிற்சியாளர், முன்களப்பணியாளர், கணக்கெடுப்பாளர், சமூகபராமரிப்பு சேவை வழங்கப்பட உள்ளது.

இதற்காக ஒன்றிய மையங்களில் 10 முன்களப் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இப்பணிகளை மேற்கொள்ள அவர்களுக்கு கையடக்க கணினியை குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரவீன்குமார் நேற்று வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன், வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன், செல்டர் தொண்டுநிறுவன செயலர் ஜோவின் பங்கேற்றனர்.

இன்னும் பழசுதான் வலைசேரிப்பட்டி சமூக ஆர்வலர் சரவணன் அளித்த மனு: மேலுார் தாலுகா அலுவலகம் பழைய கட்டடத்தில் இயங்குகிறது. ஓராண்டுக்கு முன் இந்த அலுவலகம் அருகே நவீன வசதிகளுடன் கட்டடம் கட்டி கடந்த ஜூலையில் திறப்பு விழா நடந்தது. 2 மாதங்களாகியும் பழைய கட்டடத்திலேயே இயங்குகிறது.

அதனை புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டீசல் கேனுடன் விவசாயி வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி விவசாயி பாண்டி கலெக்டர் அலுவலகம் வந்தார். அவரது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் 45 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது குறித்து தாசில்தாரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி செய்தியாளர் அறைக்கு வந்தார். செய்தியாளர்கள் அவரிடம் இருந்த டீசல் கேனை சாமர்த்தியமாக பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us