ADDED : செப் 09, 2025 04:16 AM
மதுரை: மதுரை பழங்காநத்தம் மண்டல் நிர்வாகிகள், சக்திகேந்திர பொறுப்பாளர்கள், கிளை தலைவர்கள் கூட்டம் மண்டல் தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. செப். 21ல் கொடைரோட்டில் பூத்கமிட்டி வலிமைப்படுத்துவது குறித்த மாநாடு நடக்க உள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா பங்கேற்க உள்ளார்.
கூட்டத்திற்கு பழங்காநத்தம் மண்டலில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உறுதியளித்தனர். மாநில செயலாளர் கதலி நரசிங்கபெருமாள், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட துணை தலைவர் சகாதேவன், பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.