Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கடன் தொகையால் தமிழகத்தின் அடித்தளம் ஆட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

கடன் தொகையால் தமிழகத்தின் அடித்தளம் ஆட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

கடன் தொகையால் தமிழகத்தின் அடித்தளம் ஆட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

கடன் தொகையால் தமிழகத்தின் அடித்தளம் ஆட்டம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

ADDED : ஜன 07, 2024 06:47 AM


Google News
திருமங்கலம்: 'பத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் வாங்கிய கடன் ரூ. 3,53,561 கோடி. தி.மு.க., ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் வாங்கிய கடன் 2,72,000 கோடி. இதனால் தமிழகத்தின் அடித்தளம் ஆடி போய் உள்ளது. அதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது விளம்பரத்திற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:

கடன் சுமையை ஒப்பிட்டு பார்த்தால் 2021--22ம் ஆண்டில் கடன் தொகை ரூ. 5,18,796 கோடி, 2022-23ம் ஆண்டில் கடன் தொகை ரூ. 6,30,000 கோடி, 2023-24ம் ஆண்டில் கடன் தொகை ரூ.7,28,000 கோடியாகும்.

குறிப்பாக கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் வாங்கிய கடன் ரூ.3,53,561 கோடி, தி.மு.க., ஆட்சிக்கு வந்து இந்த 2 ஆண்டுகளுக்கு மேல் வாங்கிய கடன் ரூ. 2,72,000 கோடி.

அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் கொரோனா, ஜி.எஸ்.டி., வரி இழப்பை தாண்டி வாங்கிய கடன் சதவீதம் ஜி.டி.பி., அளவில் 21.22 சதவீதம் தான்.

ஆனால் சொத்து வரி, மின் கட்டணம், விலைவாசியை உயர்த்தி எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செய்யாமல், சமூக நலத்திட்டங்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு எவ்வித கட்டமைப்புகளையும் உருவாக்காமல் தி.மு.க., அரசு வாங்கிய கடன் ஜி.டி.பி., அளவில் 26 சதவீதம் அளவில் உள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை விளம்பர வெளிச்சத்தால் நடத்துகிற ஒரு அரசாக தி.மு.க., ஆட்சி இருக்கிறது. ஜெயலலிதாவும், பழனிசாமியும் இம்மாநாட்டை நடத்தி அதன் மூலம் ரூ.3 லட்சம் கோடி அளவில் முதலீட்டை ஈர்த்து 10.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை கிடைக்க செய்தனர்.

கடலில் பேனா, நுாலகம், மைதானங்கள், ஜல்லிக்கட்டு திடலுக்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார்கள். இப்படியே சென்றால் 'கருணாநிதி நாடு' என்று கூட தமிழகத்தின் பெயரை மாற்றம் செய்து விடுவார்கள் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us