/உள்ளூர் செய்திகள்/மதுரை/சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு திருப்பலி, ஆராதனைகள்சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு திருப்பலி, ஆராதனைகள்
சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு திருப்பலி, ஆராதனைகள்
சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு திருப்பலி, ஆராதனைகள்
சர்ச்களில் ஆங்கில புத்தாண்டு திருப்பலி, ஆராதனைகள்
ADDED : ஜன 01, 2024 05:47 AM
மதுரை: 2024 ஆங்கில புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு நேற்றிரவு சர்ச்களில் திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடந்தன.
கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புதுார் லுார்து அன்னை சர்ச்சில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.
இரவு 11:00 முதல் 11:45 மணி வரை நன்றி வழிபாடும், 12:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலியும் நடந்தது.அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச்சில் பாதிரியார் எட்வின் சகாயராஜா, ஞான ஒளிவுபுரம் புனித வளனார் சர்ச்சில் பாதிரியார் ஜோசப், பாஸ்டின்நகர் துாய பவுல் சர்ச்சில் பாதிரியார் ஜெயராஜ், அஞ்சல்நகர் துாய சகாய அன்னை சர்ச்சில் பாதிரியார் அருள்சேகர் தலைமையில் நள்ளிரவு புத்தாண்டு திருப்பலி நடந்தன.
சி.எஸ்.ஐ., அசெம்பிளி ஆப் காட் சபைகளிலும் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தன, நரிமேடு சி.எஸ்.ஐ., கதீட்ரலில் பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தலைமையில் ஆராதனைகள் நடந்தன.எச்.எம். எஸ். காலனி புதிய ஜீவிய சபையின் புத்தாண்டு சிறப்பு ஆராதனை பைபாஸ் ரோடு ஜெபகோபுரத்தில் தீர்க்கதரிசன போதகர் டென்சிங் டேனியல் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நிறைவேற்றினார்.