/உள்ளூர் செய்திகள்/மதுரை/வரி செலுத்தாத வணிக நிறுவனங்களில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு 'கட்'வரி செலுத்தாத வணிக நிறுவனங்களில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு 'கட்'
வரி செலுத்தாத வணிக நிறுவனங்களில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு 'கட்'
வரி செலுத்தாத வணிக நிறுவனங்களில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு 'கட்'
வரி செலுத்தாத வணிக நிறுவனங்களில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு 'கட்'
ADDED : ஜன 06, 2024 06:08 AM
மதுரை: மதுரையில் சொத்துவரி செலுத்தாத இரண்டு வணிக நிறுவனங்களில் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புக்களை மாநகராட்சி துண்டித்தது.
மாநகராட்சியில் வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ரூ.பல கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளது. சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம், கடைகள் வாடகை வசூல் செய்ய மாநகராட்சி வருவாய் பிரிவின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மண்டலம் 3ல் பைபாஸ் ரோடு வணிக நிறுவனம் ஒன்று ரூ.1.37 கோடி, ஜெயசக்தி ஓட்டல் கட்டடத்திற்கு ரூ.73.82 லட்சம் சொத்து வரி செலுத்தவில்லை. துணை கமிஷனர் சரவணன் முன்னிலையில் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன. உதவி கமிஷனர் சுரேஷ்குமார், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் கனி, சுகாதார அலுவலர் வீரன் உடனிருந்தனர்.
தொடருமா நடவடிக்கை
மதுரை நகரில் பல நிறுவனங்கள் ரூ.பல கோடி வரி பாக்கி வைத்துள்ளன. அந்த நிறுவனங்களிலும் பாரபட்சமின்றி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.