Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்று ஒருநாள் மட்டுமே தவறவிடாதீங்க மக்களே; இன்றே ஷாப்பிங் செய்ய கிளம்புங்க...

மதுரை தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்று ஒருநாள் மட்டுமே தவறவிடாதீங்க மக்களே; இன்றே ஷாப்பிங் செய்ய கிளம்புங்க...

மதுரை தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்று ஒருநாள் மட்டுமே தவறவிடாதீங்க மக்களே; இன்றே ஷாப்பிங் செய்ய கிளம்புங்க...

மதுரை தினமலர் ஷாப்பிங் திருவிழா இன்று ஒருநாள் மட்டுமே தவறவிடாதீங்க மக்களே; இன்றே ஷாப்பிங் செய்ய கிளம்புங்க...

UPDATED : செப் 01, 2025 03:16 AMADDED : செப் 01, 2025 02:53 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆக.,29 ல் துவங்கிய தினமலர், சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ - 2025 வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ், பில்டிங் அன்ட் ஆட்டோ மொபைல் எக்ஸ்போ'வில் மூன்றாவது நாளான நேற்றும் சித்திரை திருவிழா போல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று (செப்.,1) வாய்ப்பை தவறவிட்டால் இப்படி ஒரு அற்புதமான ஷாப்பிங் விழாவிற்காக இனி அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டும். எனவே இன்றே ஷாப்பிங் செய்ய கிளம்புங்க மக்களே.

குடும்பமாக... குதுாகலமாக தினமலர் ஷாப்பிங் என்றாலே அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது பெண்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை இந்தாண்டும் வீண் போகவில்லை. ஸ்டால்களில் இந்தாண்டும் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

அவர்களுக்கு பிடித்த காஸ் மெட்டிக்ஸ், காட்டன் ஆடைகள், பேன்ஸி பேக்ஸ், டிசைனர் ஜூவல்லரி, பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், சோபா, கட்டில், ஊஞ்சல் உள்ளிட்ட பொருட்களை வாங்கி குவித்தனர்.

இசையும் ருசியும் ஸ்டால்களில் ஷாப்பிங் செய்த பின் குடும்பத்துடன் புட்கோர்ட்டுக்கு சென்று சிக்கன், மட்டன் பிரியாணி, தயிர் சாதம், பணியாரம், ஜூஸ் என உணவு, குளிர் பானங்களை ஒரு கை பார்த்தனர்.

போத்தீஸ் கேம் ஸோன் பகுதியில் குட்டீஸ்களின் கூட்டம் அலைமோதியது.

ஆர்வமுடன் ஹேப்பிகார்ஸ் 7 எஸ் ரைடு, எலக்ட்ரானிக்ஸ் பைக், சிக்குபுக்கு ரயில், புல் ரைடு, ஒட்டக சவாரி என அனைத்தையும் ஜாலியாக விளையாடி மகிழ்ந்தனர்.

தினமலர் சந்தாவுக்குரூ.1000 மதிப்பில் புத்தகம் தினமலர் நாளிதழின் ஆண்டு சந்தாவுக்கு ரூ.1999 செலுத்தி பதிவு செய்தால் ஓராண்டிற்கான நாளிதழ், ரூ.5 லட்சம் மதிப்பிலான தனிநபர் விபத்து காப்பீடு, ஒரு லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு, ரூ.5 லட்சம் வீட்டு உடைமைகளுக்கான காப்பீடு பலன்கள் கிடைக்கின்றன. எக்ஸ்போ அரங்கில் இந்த திட்டத்தில் இணைந்தால் கூடுதல் பலனாக ரூ.1000 மதிப்புள்ள தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.

இணைந்து கரம் சேர்ப்போர்: பவர்டு பை ஜி ஸ்கொயர். அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அன்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் பிராங் பேபர், ஆல்பா பர்னிச்சர்ஸ், சலானி ஜூவல்லரிஸ், கோவை லட்சுமி, ரேடியோ பார்ட்னர் மிர்ச்சி, ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ்

தள்ளுபடியில் வாங்க

இன்று ஒரு நாள் தான் வாங்க

* ↓அப்பலோ சேப்டி லாக்கர் ஸ்டாலில், வீட்டில் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு வகை வகையான சேப்டி லாக்கர்கள் சைஸ் வாரியாக உள்ளன. 10 சதவீதம் தள்ளுபடி.

மாயா ஹெர்பல்ஸ் ஸ்டாலில் பத்தி, சோப்பு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். தைலம் வகைகளுக்கு தள்ளுபடி 15 சதவீதம்.

வாக்கம் கிளீனர் ஸ்டாலில் ஏசி, கொசுவலை, சோபா செட் கிளீனிங் செய்யும் வாக்கம் கிளீனர் தள்ளுபடி ரூ.1500.

ஸ்ரீராமச்சந்திரா கண் மருத்துவமனை ஸ்டாலில் கூப்பனை பெற்றால் கண் பரிசோதனைகளுக்கு ஆலோசனை கட்டணம் இலவசம்.

பி.ஜி.எஸ்., டைல்ஸ் மார்ட் ஸ்டாலில், ரூ.50 ஆயிரம் டைல்ஸ், கிரானைட்ஸ் வாங்கினால் ரூ.2500 தள்ளுபடி. நவராத்திரி ஸ்பெஷலாக ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் வாங்குவோருக்கு ஹாட்பாக்ஸ், குக்கர், பேன் உள்ளிட்டவை இலவசம்.

மீனாட்சி ஹோம் மேட் ஸ்டாலில், சூப் பவுடர் பாக்கெட்டுகளுக்கு ரூ.30 தள்ளுபடி. இது போன்று இன்னும் பல தள்ளுபடிகள், ஆபர்கள், இலவசங்கள் உள்ளன

அத்தனை பொருட்களும் புதுவிதம்; அள்ள அள்ள ஆசை தான் தீரவில்லை

பெண்கள் மகிழ்ச்சி


மதுரை: 'வானில் தெரியும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை போல் மதுரை தமுக்கம் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில் குவிந்து கிடக்கும் பொருட்களில் எத்தனை வாங்கினாலும் இன்னும் வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் தீரவில்லை' என குட்டீஸ் சூழ

குடும்பத்துடன் பங்கேற்ற பெண்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அவர்கள் கூறியதாவது:

வாய்ப்பை தவற விடாதீங்க...வளர்மதி, மதுரை


ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கண்காட்சிக்கு வருகிறேன். இந்தாண்டும் ஸ்டால்களில் இடம்

பெற்றுள்ள விதவித உணவு வகைகள் பெண்களை ஆச்சரியமடைய வைக்கின்றன.

குழந்தைகளுக்கு சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட சத்து மாவு, ஹோம் மேடு

உணவுகளை விரும்பி வாங்கினேன்...

அதுவா... இதுவா... அமீரா, மதுரை


தினமலர் தாமரை

பிரதர்ஸ் ஸ்டாலில்

ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன. கிரைம் ஸ்டோரி புத்தகங்கள் படிப்பது எனக்கு

பிடிக்கும். அதுதொடர்பான புத்தகங்கள்

வாங்கினேன். அனைத்து ஸ்டால்களிலும்

பொருட்கள் குவிந்துகிடக்கின்றன. அதை எடுப்பதா, இதை

எடுப்பதா என

குழப்பமே வருகிறது.

பார்க்க வேண்டிய ஷாப்பிங் திருவிழா அபிநயா, மதுரை


இந்தாண்டு ஆர்ட் எம்போரியம், ஆர்க்கிடெக்சர் சார்ந்த பொருட்கள் அதிகம் கிடைக்கின்றன. கெமிக்கல் இல்லாத சிறுதானியங்களில் வகை வகையான உணவுகள் கிடைப்பது அருமை. குழந்தைகள் விரும்பும் பிஸ்கட்டுகள், பொம்மைகள் தாராளமாக கிடைக்கின்றன. பெண்கள் குடும்பத்துடன் ஒருமுறை வந்து பார்க்க வேண்டிய ஷாப்பிங் திருவிழா இது.

மனசு நிறைஞ்சிருக்கு , விதுனிகா, மதுரை


அனைத்தும் பிரமிப்பாக உள்ளது. பெண்களுக்கான ஆடைகள் பல ரகங்களில் கிடைக்கின்றன. விலையும் அதிகமில்லை. தோடு, ஜிமிக்கி, வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை அள்ளினேன். குடும்பத்துடன் ஷாப்பிங் வந்தது மனம் நிறைவாக உள்ளது.

அள்ள அள்ள ஆசை, வசந்தி, மதுரை


தினமலர் எக்ஸ்போவிற்கு தொடர்ந்து 4வது ஆண்டாக வருகிறேன். இதை வாங்குவதா, அதை வாங்குவதா என எந்த பொருட்களை பார்த்தாலும் எடுக்க ஆசையாக உள்ளது. உணவுப் பொருட்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது.

பார்வையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி பார்வையிடும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது அருமை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us