/உள்ளூர் செய்திகள்/மதுரை/விபத்தில் தனியாக பிரிந்த தலையின் மேல்பகுதியை ஒட்டவைத்த டாக்டர்கள்: மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிய ஆப்பரேஷன்விபத்தில் தனியாக பிரிந்த தலையின் மேல்பகுதியை ஒட்டவைத்த டாக்டர்கள்: மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிய ஆப்பரேஷன்
விபத்தில் தனியாக பிரிந்த தலையின் மேல்பகுதியை ஒட்டவைத்த டாக்டர்கள்: மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிய ஆப்பரேஷன்
விபத்தில் தனியாக பிரிந்த தலையின் மேல்பகுதியை ஒட்டவைத்த டாக்டர்கள்: மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிய ஆப்பரேஷன்
விபத்தில் தனியாக பிரிந்த தலையின் மேல்பகுதியை ஒட்டவைத்த டாக்டர்கள்: மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அரிய ஆப்பரேஷன்
ADDED : ஜன 30, 2024 10:43 PM
மதுரை : மதுரை வண்டியூரைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், தொழிற்சாலையில் சுழலும் இயந்திரத்தில் தலைமுடி சிக்கியதால், நிகழ்ந்த விபத்தில் தலையில் கடுமையாக பாதிப்படைந்தார். அவரது உச்சந்தலை தனியாக பிரிந்து வந்துவிட்டதால், ஒட்டுமொத்த மண்டையோடும், முன்னந்தலையும், இடது காதின் மூன்றில் 2 பகுதியும் வெளியே தெரிந்த நிலையில் பாதிப்புக்குள்ளானார்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 7:00 மணி நேரம் அவசர சிகிச்சையாக ஆப்பரேஷன் நடந்தது. பிளாஸ்டிக் சர்ஜரி துறை தலைவர் பினிட்டா ஜெனா, டாக்டர் பவ்யா மனோஷிலா குழுவினருக்கு, பெண்ணின் தலையில் சேதமடைந்த ரத்தக்குழாய்கள், தலைமுடி போன்ற மெல்லிய நுண்குழல்களை அடையாளம் காண்பதும், ரத்த ஓட்டத்தை மீண்டும் கொண்டுவருவது கடும் சவாலாக இருந்தது.
ஆப்பரேஷன் முடிந்து சில மணி நேரங்கள் கழித்து, மறுபடியும் பொருத்தப்பட்ட உச்சந்தலையின் ஒரு பகுதியில் ரத்த ஓட்டம் தேவையான அளவுக்கும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதனால் 'மைக்ரோ வாஸ்குலர் அனாஸ்தோமாசிஸ்' எனப்படும் மருத்துவ செயல்முறையை டாக்டர்கள் குழு திரும்பவும் செய்துள்ளனர். இப்பெண்ணுக்கு உரிய நேரத்தில் செய்த இந்த ஆப்பரேஷனை உடனே செய்திருக்காவிடில், வாழ்நாள் முழுவதும் கோரமான தோற்றமே இருக்கும். 'கோல்டன் அவர்' எனப்படும் முக்கிய நேரத்தை கடந்து அவர் வந்திருந்தாலும், கிழிபட்டு இருந்த அவரது உச்சந்தலையை மீண்டும் சரியாக பொருத்தி பதிய வைத்துள்ளனர். இருவாரங்களில் ஒட்டவைத்த அவரது தலையில் மீண்டும் முடிவளர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன.
மருத்துவ நிர்வாகி கண்ணன் கூறுகையில், ''இதனை ஒரு அரிதான நிகழ்வாக பார்க்க வேண்டியுள்ளது. உரிய நேரத்தை கடந்து வந்த அவரது உச்சந்தலையின் ஒருபகுதியை மருத்துவ குழுவிடம் ஒப்படைக்கும் வரை முறையாக பாதுகாக்கப்படாமலேயே இருந்தது. அதையெல்லாம் முறையாக ஒருங்கிணைத்து செயல்படுவது சவாலாக இருந்தது. இருப்பினும் டாக்டர்கள் குழுவினர் நிரந்தர தீர்வை கண்டுள்ளனர்'' என்றார்.