Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இனிதே நிறைவு

மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இனிதே நிறைவு

மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இனிதே நிறைவு

மதுரையில் தினமலர் ஷாப்பிங் திருவிழா இனிதே நிறைவு

ADDED : செப் 02, 2025 05:44 AM


Google News
மதுரை : மதுரையில் ஆக.29ல் துவங்கிய தினமலர், சத்யா இணைந்து வழங்கிய தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ-2025 வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ், பில்டிங் அண்டு ஆட்டோமொபைல் எக்ஸ்போ நேற்று இனிதே நிறைவு பெற்றது.

நான்கு நாட்கள் நடந்த இக்கண்காட்சியை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் துவக்கி வைத்தார். அவருக்கும், கண்காட்சியை இணைந்து வழங்கிய சத்யா நிறுவனம், இணைந்து கரம் கோர்த்த பவர்டு பை ஸ்பான்சர் ஜி ஸ்கொயர், அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அண்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் பிராங் பேபர், ஆல்பா பர்னிச்சர்ஸ், சலானி ஜூவல்லரிஸ், கோவை லட்சுமி, ரேடியோ பார்ட்னர் மிர்ச்சி, ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், போலீஸ், போக்குவரத்து போலீஸ், தீயணைப்பு துறையினர், மின்சார வாரியம், கண்காட்சியில் ஸ்டால்கள் அமைத்த நிறுவனங்கள், கண்காட்சிக்கு வந்த மக்கள், அவசர சிகிச்சை உதவி வழங்கிய மீனாட்சி சிறப்பு மருத்துவமனை என அனைவருக்கும் நன்றியை தினமலர் தெரிவிக்கிறது.

ஸ்டால்கள் அமைத்த வர்த்தகர்கள் கூறியதாவது: தினமலர் நடத்தும் ஷாப்பிங் திருவிழா என்றாலே மக்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மதுரையில் நான்கு நாட்களும் கண்காட்சியில் குவிந்த மக்கள் கூட்டம் எங்களை வியக்க வைத்தது.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வருகை எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. விரும்பிய பொருட்களை தேடி வாங்கினர். அடுத்தாண்டு மீண்டும் சந்திக்க ஆவலாய் உள்ளோம் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us