ADDED : ஜன 03, 2024 06:30 AM
மதுரை: மதுரை ஸ்ரீ நவநீத கண்ணன் சன்னதி வளாகத்தில் ஸ்ரீ பூ கலாசார மையம் சார்பில் சித்திரத்திருப்பாவை சொற்பொழிவு நடந்தது.
தர்மகர்த்தா பிரசன்னகுமார், நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தனர். செந்தமிழ்க் கல்லுாரி பேராசிரியர் லாவண்யா ஜெயராம் பேசினர். சிறப்பு விருந்தினர்களாக லட்சுமி நாராயணன், ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை மைய நிர்வாகிகள் சுஜாதா, அழகர்சாமி ராமானுஜ தாசர் ஒருங்கிணைத்தார்கள். திருப்பாவை ஓவிய கண்காட்சி நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஜெகநாதன் நன்றி கூறினார்.