ADDED : பிப் 12, 2024 05:20 AM

டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி-பேரையூர் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வைகை கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணானது.
இதை கடந்த மாதம் பெரிய பள்ளம் தோண்டி சரி செய்த வைகை கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள், பணிமுடிந்ததும் பள்ளத்தை மூட மறந்து விட்டனர். சாலை ஓரத்தில் இருக்கும் இந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. திறந்தவெளி கிணறு போல் இருக்கும் இந்த குழியில் பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்கள் விழும் அபாயம் உள்ளது. இந்தச் சாலையில் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்தப் பள்ளத்தை உடனே மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.