ADDED : செப் 11, 2025 05:21 AM

திருப்பரங்குன்றம் : விளாச்சேரியில் சேதமடைந்துள்ள வரத்து கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய்கள் மூலம் திருப்பரங்குன்றம் கண்மாய்கள் நிரம்பும். பானாங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாயில் விளாச்சேரி பகுதியில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதற்காக இரண்டு வரத்து கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களில் செல்லும் தண்ணீர் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மடையின் அருகே உள்ள இரண்டு வரத்து கால்வாய்களும் சேதமடைந்துள்ளன.
அணை தண்ணீர் திறப்பதற்கு முன்பு அந்த கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை தேவை என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.