/உள்ளூர் செய்திகள்/மதுரை/தினமும் 5 ஆயிரம் டன் வண்ண கயிறு உற்பத்திதினமும் 5 ஆயிரம் டன் வண்ண கயிறு உற்பத்தி
தினமும் 5 ஆயிரம் டன் வண்ண கயிறு உற்பத்தி
தினமும் 5 ஆயிரம் டன் வண்ண கயிறு உற்பத்தி
தினமும் 5 ஆயிரம் டன் வண்ண கயிறு உற்பத்தி
ADDED : ஜன 03, 2024 06:22 AM

சிலைமான்: மதுரை பனையூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளுக்கு பயன்படுத்தும் வண்ண கயிறு தினமும் 5 ஆயிரம் டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட கயிறு திரிக்கும் தொழிலாளிகள் உள்ளனர். மாடுகளுக்கு கட்டப்படும் தலை கயிறு, கழுத்து கயிறு, மூக்காணாங்கயிறு, நெற்றி கயிறு, சங்கு கயிறு என பல வண்ணத்தில் கயிறுகளை திரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராமலிங்கம்:சேலை துணிகளுக்கு தயாரிக்கப்படும் நுால்களின் மீதி மதுரை, திருச்சி, கரூர் பகுதியிலிருந்து எங்களுக்கு பல வண்ணங்களில் பண்டலாக வழங்கப்படும். இதை தேவைக்கு 3,4,6 பிரி வரை கயிறு திரிக்கப்படுகிறது. கன்று குட்டி முதல் பெரிய காளைகள் வரையிலான மாடுகளுக்கு தேவையான கயிறுகள் உற்பத்தி செய்கிறோம். பொங்கல் பண்டிகையின் போது மட்டும் தினமும் வேலை இருக்கும் என்றார்.