/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு '4 ஆண்டு' சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு '4 ஆண்டு'
சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு '4 ஆண்டு'
சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு '4 ஆண்டு'
சுங்கத்துறை அதிகாரி, மனைவிக்கு '4 ஆண்டு'
ADDED : மார் 23, 2025 01:51 AM
மதுரை: சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 66. சுங்கத்துறை கண்காணிப்பாளரான இவர், அவரது மனைவி கீதா, 60, ஆகியோர் சொத்து தொடர்பான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள், 2012ல் சோதனை நடத்தினர்.
வருமானத்திற்கு அதிகமாக, 1.10 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிந்தது. மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து அந்நீதிமன்றம் 2018ல் உத்தரவிட்டது. எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
வருமானத்திற்கான ஆதாரத்தை நிரூபிப்பது குற்றம் சாட்டப்பட்டவரின் கடமை. கீழமை நீதிமன்றம் சாதாரண காரணங்களுக்காக சி.பி.ஐ., தரப்பு சாட்சிகளின் முக்கிய ஆதாரங்களை நிராகரித்துள்ளது.
இருவரையும் விடுவிப்பதில் சட்ட ரீதியாக தவறிழைத்துள்ளது. நீதி நிர்வாகம் கேலிக்கூத்தாகி விடக்கூடாது என்பதற்காக, நீதியின் நலன் கருதி கீழமை நீதிமன்ற உத்தரவை இந்நீதிமன்றம் ரத்து செய்கிறது.
கோவிந்தசாமி, கீதாவிற்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, கோவிந்தசாமிக்கு 75 லட்சம் ரூபாய், கீதாவிற்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.