/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்.பி.எப்., வேலை மோசடி 5 பேருக்கு நான்கு ஆண்டு சிறை ஆர்.பி.எப்., வேலை மோசடி 5 பேருக்கு நான்கு ஆண்டு சிறை
ஆர்.பி.எப்., வேலை மோசடி 5 பேருக்கு நான்கு ஆண்டு சிறை
ஆர்.பி.எப்., வேலை மோசடி 5 பேருக்கு நான்கு ஆண்டு சிறை
ஆர்.பி.எப்., வேலை மோசடி 5 பேருக்கு நான்கு ஆண்டு சிறை
ADDED : மார் 23, 2025 01:59 AM
மதுரை: ஆர்.பி.எப்., போலீசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சிலரிடம் பணம் பெற்று போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடியில் ஈடுபட்ட ஐவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
சென்னை, போரூரைச் சேர்ந்த செந்தில்குமார், 49, தங்கம், 63, அம்பத்துார் பாஸ்கரன், 63, அயனாவரம் ஜாய்சன், 72, விருதுநகர் மாவட்டம், கட்டயதேவன்பட்டி காளிதாஸ், 59.
இவர்கள் ரயில்வே பாதுகாப்பு படையில் எஸ்.ஐ., மற்றும் போலீஸ் வேலை வாங்கி தருவதாகக்கூறி, சிலரிடம் பணம் பெற்றுக்கொண்டு, போலி நியமன உத்தரவுகள் வழங்கி மோசடி செய்ததாக, 2010ல் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது.
மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, அந்நீதிமன்றம் செந்தில்குமார் உள்ளிட்ட ஐவரை 2017ல் விடுதலை செய்தது. எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பு உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தது.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: வேலையில்லாத் திண்டாட்டம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. வேலையற்ற இளைஞர்கள் ஏமாற்றுக்காரர்களிடம் எளிதில் இரையாகின்றனர்.
அவர்களின் பாதகமாக சூழ்நிலைகளை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஆதாரங்களை சரியான முறையில் கீழமை நீதிமன்றம் பரிசீலித்திருக்க வேண்டும். அந்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
செந்தில்குமார், தங்கம், பாஸ்கரன், ஜாய்சன், காளிதாசுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.