ADDED : செப் 21, 2025 04:45 AM
மேலுார்: மேலுார் வழக்கறிஞர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
தலைவர் திருமேனி தலைமை வகித்தார். செயலாளர் சுரேந்தர், பொருளாளர் மேக வர்ணன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேலுாரில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை விரைந்த கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
பழுதடைந்த நீதிமன்ற கட்டடங்களை பராமரிக்காமல் காலம் கடத்தும் பொதுப்பணித்துறையை கண்டித்து நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடு பட்டனர்.