/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அ.தி.மு.க.,வுக்கு அழிவுகாலம் காங்., எம்.பி., சொல்கிறார் அ.தி.மு.க.,வுக்கு அழிவுகாலம் காங்., எம்.பி., சொல்கிறார்
அ.தி.மு.க.,வுக்கு அழிவுகாலம் காங்., எம்.பி., சொல்கிறார்
அ.தி.மு.க.,வுக்கு அழிவுகாலம் காங்., எம்.பி., சொல்கிறார்
அ.தி.மு.க.,வுக்கு அழிவுகாலம் காங்., எம்.பி., சொல்கிறார்
ADDED : செப் 16, 2025 04:27 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் காங்., சார்பில் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாவது:
வாக்கு திருட்டுக்கு எதிராக மாற்றங்களை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியை சேர்ந்த 15 ஓட்டுக்கள் பா.ஜ., வேட்பாளருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. அவை செல்லாத ஓட்டுகள்.
கட்சித் தலைவர்களுக்கு கூட்டம் வரும். முதல்வர் ஸ்டாலினுக்கும்தான் கூட்டம் வருகிறது. விஜய்க்கு கூட்டம் வருவது மகிழ்ச்சி. தேர்தலில் மக்கள் எப்படி முடிவு எடுக்கிறார்கள் என பார்க்க வேண்டும்.
மத்திய அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. தன்னை ஜெயலலிதா மகள் என சொல்லிக் கொள்ளும் பெண்மணியிடம் 30 நிமிடம் ஆலோசனை நடத்துகிறார். அ.தி.மு.க., விற்கு அழிவு காலம் துவங்கிவிட்டது. அ.தி.மு.க., வை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்துகிறார் அமித்ஷா. அ.தி.மு.க., தொண்டர்கள் யோசிக்க வேண்டும் என்றார்.