ADDED : பிப் 06, 2024 07:33 AM
மதுரை : இந்திய ஐக்கிய கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் பாஸ்கரன் மதுரையில் கூறியதாவது: கட்சியின் தமிழ்நாடு மாநில ஸ்தாபன மாநாடு, மார்ச் 2 ல் சென்னையில் நடக்கிறது. இதில் புதிய தலைவர், மாநில செயற்குழு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மத்திய ஆட்சில் இருக்கும் பா.ஜ.,வை வீழ்த்தி இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி 'இண்டியா' கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் முல்லை முருகன், மாவட்ட செயலாளர் ஹனிபா பங்கேற்றனர்.