/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மண்டல தலைவர், கவுன்சிலர் மீது மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மண்டல தலைவர், கவுன்சிலர் மீது மாநகராட்சி கமிஷனரிடம் புகார்
மண்டல தலைவர், கவுன்சிலர் மீது மாநகராட்சி கமிஷனரிடம் புகார்
மண்டல தலைவர், கவுன்சிலர் மீது மாநகராட்சி கமிஷனரிடம் புகார்
மண்டல தலைவர், கவுன்சிலர் மீது மாநகராட்சி கமிஷனரிடம் புகார்
ADDED : மார் 26, 2025 03:55 AM
மதுரை : மதுரையில் தி.மு.க., மண்டல தலைவர், கவுன்சிலர், கட்சி பிரமுகர்கள் குறித்து கமிஷனர் சித்ராவிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் அளித்தனர்.
மதுரை வேல்முருகன் நகர் தாமிரபரணி தெரு குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பாபு, செயலாளர் முருகன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் கமிஷனரிடம் மனு அளித்தனர். அதில், மக்கள் நடைபாதையில் கவுன்சிலர் அலுவலகம் கட்டுவதற்கு முயற்சி செய்யப்படுகிறது. நீதிமன்றம் தடையுத்தரவு பெற்றும் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் அதே இடத்தில் அலுவலகம் கட்ட உறுதியாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இதுபோல் கீழமாரட் வீதி தயிர் மார்க்கெட் கட்டட கடையில் உள்ள காய்கனி வியாபாரிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தயிர் மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் போது 50 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரம் செய்வோர் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டுத்தாவணி கடைகளை விட மாத வாடகையை அதிகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும். மேலும் டெண்டர் மூலம் கடைகள் ஒதுக்கும்போது ஏற்கனவே பல ஆண்டுகளாக கடை நடத்தியவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஒதுக்க வேண்டும். இவ்விஷயத்தில் தி.மு.க., மண்டல தலைவர் ஒருவர் தலையீட்டை தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதுபோல் மாநகராட்சியால் அடையாள அட்டை வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், ஆளுங்கட்சி பிரமுகர்கள் வசூலில் ஈடுபடுகின்றனர் எனவும் முறையிட்டனர்.
இவர்களை அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா ஒருங்கிணைத்து கமிஷனரிடம் அழைத்து சென்றார். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்தார்.