பயிற்சி போலீசிற்கு கமிஷனர் பாராட்டு
பயிற்சி போலீசிற்கு கமிஷனர் பாராட்டு
பயிற்சி போலீசிற்கு கமிஷனர் பாராட்டு
ADDED : மே 22, 2025 04:35 AM
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் மே 12ல் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடந்தது.
அன்று தல்லாகுளத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய சிறுவனை இடையபட்டி போலீஸ் பயிற்சி பள்ளி போலீசார் சந்திரபிரகாஷ், சிந்தனை வளவன், சரண்ராஜ், சைமன் ஆகியோர் முதலுதவி அளித்தும் ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் தோளில் சுமந்து சென்றும் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர்.
அவர்களை கமிஷனர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டு சான்று வழங்கினார்.
நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் பெத்துராஜ் உடனிருந்தார்.