ADDED : மே 26, 2025 02:13 AM
மதுரை:மதுரை தியாகராஜர் கல்வியியல் கல்லுாரியில் கல்லுாரி தின விழா நடந்தது. செயலாளர் நடனகோபால், தலைவர் வல்லி ராமசாமி தலைமை வகித்தனர். முதல்வர் பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.
மதுரை காமராஜ் பல்கலை தொலைதுாரக் கல்வி, ஆன்லைன் கல்வி மைய இயக்குநர் முத்துப்பாண்டி, தற்போதைய கல்வி சூழலில் நவீன தொழில்நுட்ப முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தொலைதுாரக் கல்வி, ஆன்லைன் வழி கற்றல் மூலம் அனைவரும் கல்வியறிவு பெறக்கூடிய சூழல் உருவாகி வருவதைக் குறிப்பிட்டார்.
மாணவர்கள், தங்களை மேம்படுத்திக்கொள்ளும் எண்ணத்துடன் பாடங்களை கற்று, சமூக நலனுக்காக செயல்பட அறிவுறுத்தினார். கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.