/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையின் முதல் மேயர் முத்து சிலையை திறந்தார் முதல்வர் மதுரையின் முதல் மேயர் முத்து சிலையை திறந்தார் முதல்வர்
மதுரையின் முதல் மேயர் முத்து சிலையை திறந்தார் முதல்வர்
மதுரையின் முதல் மேயர் முத்து சிலையை திறந்தார் முதல்வர்
மதுரையின் முதல் மேயர் முத்து சிலையை திறந்தார் முதல்வர்
ADDED : ஜூன் 01, 2025 03:56 AM

மதுரை: மதுரையின் முதல் மேயர் முத்துவின் 6 அடி வெண்கலச் சிலையை மதுரா கோட்ஸ் மில் அருகே முதல்வர் ஸ்டாலின் இரவு 9:15 மணிக்கு திறந்து வைத்தார்.
முத்துவின் மகன்கள் நல்லதம்பி, கருணாநிதி, அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் தளபதி, மணிமாறன் பங்கேற்றனர். முதல்வருக்கு வெள்ளிக்கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கருணாநிதி முத்து கூறுகையில்,''நாங்கள் திராவிட பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஏற்கனவே இருந்த சிமென்ட் சிலையை முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்தது மகிழ்ச்சியளிக்கிறது '' என்றார். முத்துவின் குடும்பத்தினரிடம் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
முத்து குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி,'என் தம்பி முதல்வர் ஸ்டாலின் திறப்பது மகிழ்ச்சி' என பேசிய வீடியோ, பேராசிரியர் சாலமன் பாப்பையா பேச்சு அடங்கிய வீடியோ முன்னதாக ஒளிபரப்பப்பட்டது. முதல்வருக்கு கவுன்சிலர் ஜெயராமன் ஆட்டுக்குட்டியை பரிசாக அளித்தார்.
பந்தல்குடி கால்வாயை பார்த்தார்
சர்க்கியூட் ஹவுசிற்கு செல்லும் வழியில், வேனில் இருந்து இறங்கி பந்தல்குடி கால்வாயை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதனை துார்வார நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
முன்னதாக காலையில் இந்த கால்வாயின் சீர்கேட்டை முதல்வரின் பார்வையில் இருந்து மறைக்க, தி.மு.க.,வினர் துணியால் மறைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அ.தி.மு.க., பா.ஜ.,வினர் கிண்டல் செய்ததை தொடர்ந்து அந்த துணி அகற்றப்பட்டது.