ADDED : பிப் 12, 2024 05:12 AM

புதுார்: மதுரை புதுார் லுார்தன்னை சர்ச் 104ம் ஆண்டு விழாவின் கடைசி நாளை முன்னிட்டு நேற்று அனைத்து சமயத்தவர்களும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து தங்கள் நேர்த்தியை செலுத்தினர். சர்ச் பாதிரியார் ஜார்ஜ் தலைமை தாங்கினார். உதவி பாதிரியார்கள் பாக்கியராஜ், யூஜின், ஜஸ்டின் இமானுவேல், அருள்குமார், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர்.
'அன்னையின் கரங்களாக இருந்து ஆண்டு முழுவதும் பயணம் செய்வோம்' என மறையுரை நிகழ்த்தப்பட்டது. மாலையில் ஜெபமாலை, நற்கருணை, ஆராதனை நடத்தப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.