ADDED : மே 10, 2025 06:08 AM
மதுரை; மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் பாத்திமா அன்னை சர்ச் 44ம் ஆண்டுதிருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.பாஸ்டின் நகர் துாய பவுல் ஆலய பாதிரியார் ஜெயராஜ் கொடியேற்றி, சிறப்பு திருப்பலி நிறைவேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
மே 18 வரை தினமும் மாலை ஜெபமாலை வழிபாடு நடக்கிறது. 17ம் தேதி தேர்பவனி நடக்கிறது.
ஏற்பாடுகளை பாதிரியார் ஜெயராஜ் தலைமையில் பங்கு பேரவை துணைத்தலைவர் சிலுவை, பாத்திமா நகர் மண்டல தலைவர் பீட்டர் இன்பராஜ், சர்ச்நிர்வாக குழுத் தலைவர் தார்சிஸ், உப தலைவர்கள் அந்தோணி ஹென்றி, சைமன்ஆரோக்கியராஜ், செயலர் அமலன், பொருளாளர் ஜான் பிரிட்டோ, இளைஞர் அமைப்பினர் செய்து வருகின்றனர்.