/உள்ளூர் செய்திகள்/மதுரை/குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தியை ஊட்ட வேண்டும்: திருச்சி கல்யாணராமன் பேச்சுகுழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தியை ஊட்ட வேண்டும்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தியை ஊட்ட வேண்டும்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தியை ஊட்ட வேண்டும்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தியை ஊட்ட வேண்டும்: திருச்சி கல்யாணராமன் பேச்சு
ADDED : ஜூன் 17, 2024 01:15 PM

மதுரை: குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தியை ஊட்ட வேண்டும் என ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.
மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லுாரியில், கருமுத்து கண்ணன் நினைவாக கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடந்தது. நிறைவு நாளான நேற்று 'ராமர் பட்டாபிஷேகம்' என்ற தலைப்பில் கல்யாணராமன் பேசியதாவது: ராமர், கோபத்தை வென்றவர். எல்லோருக்கும் கோபம் வரலாம். அதை அடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
தேவையை அறிந்து அதை பூர்த்தி செய்பவனே வள்ளல். எப்போதும் நல்லவர்களோடு இருக்க வேண்டும். நம் தர்மம் சொல்லியதைச் சரியாகக் கடைபிடிக்க வேண்டும். பகவான் திருவடியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். அதைத்தவிர வேறு எதுவும் நிரந்தரம் இல்லை.எதையுமே கஷ்டப்பட்டால்தான் அடைய முடியும். சிலர் தாமே கஷ்டத்தை வரவழைத்துக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பக்தியை ஊட்ட வேண்டும்.
பக்தி இல்லையேல் உலகில் எதுவும் இல்லை. இறைவனிடத்தில் உண்மையான பக்தி செலுத்த வேண்டும். எப்பொழுதும் ராம நாமம் சொல்ல வேண்டும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கடமைகளை தொடங்க வேண்டும். ஆசையை அடக்கி விட்டால் மனம் பக்குவமடையும் என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். நமது முன்னோர்கள் பிரதிபலன் பாராமல் தொண்டு செய்ததால் தான் நாம் இன்றைக்கு நன்றாக இருக்கிறோம். இவ்வாறு பேசினார்.
18 நாட்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தியதற்கு கல்லுாரி செயலாளர் ஹரி தியாகராஜன் மாலை அணிவித்து கவுரவித்தார். அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்தார்.