/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குழந்தைத் தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்பு குழந்தைத் தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்பு
குழந்தைத் தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்பு
குழந்தைத் தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்பு
குழந்தைத் தொழிலாளர் தின உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 13, 2025 02:51 AM
மதுரை: மதுரையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை தொழிலாளர் ஆணையர் ராமன் உத்தரவின்படி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்ரமணியன் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர், தொழிலக பாதுகாப்பு இயக்கக இணை இயக்குனர் வேலுமணி, துணை இயக்குனர் சுதாகர், மதுரை சமக்ரசிக் ஷா துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் தொழிலாளர் இணை ஆணையர் சுப்ரமணியன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கம், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வினியோகித்தல் நடந்தது. அலங்காநல்லுார் கலைக்குழுவினர் வீதிநாடகம் நடத்தினர்.
இதில் துணை ஆய்வர்கள், உதவி ஆய்வர்கள், முத்திரை ஆய்வர்கள் உட்பட பலர் பங்கேற்றனனர். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தப் பணியிலும், 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலிலும் ஈடுபடுத்துவதை கண்டறிந்தால் மாவட்ட நிர்வாம் அல்லது சைல்ட் லைனுக்கு 1098 மற்றும் 0452 - 2671098 ல் தொடர்பு கொள்ளலாம்.
மத்திய அரசின் பென்சில் போர்டல் (www.pencilportal.gov.in) மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என, உதவி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.