ADDED : மார் 23, 2025 04:06 AM

பேரையூர், : பேரையூர் பேரூராட்சி பரதபாண்டியன் நகர், சிலைமலைப்பட்டி ரோடு, துர்க்கா நகர் பகுதிகளில் சாக்கடை துார் வாராமல் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி சாக்கடை கால்வாய்கள் பல ஆண்டுகளாக் துார்ந்து போய் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து பகலிலும் கடிக்கிறது.
பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை துார்வராமல் பேரூராட்சி அலட்சியம் காட்டுகிறது.
சுகாதாரக் கேடு ஏற்பட்டு பலர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சுகாதார சீர்கேடை சரி செய்ய முன்வர வேண்டும்.