பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா
பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா
பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழா
ADDED : மே 24, 2025 03:37 AM
மேலுார்: மேலுாரில் பெரும்பிடுகு முத்தரையரின் 1350ம் ஆண்டு சதய விழா பா.ஜ., சார்பில் நடந்தது. கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜு வரவேற்றார். கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார்.
இணைத் தொகுதி பொறுப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெரும்பிடுகு முத்தரையரின் படத்துக்கு மரியாதை செய்தனர். நகர் தலைவர் மாரி சக்கரவர்த்தி, நிர்வாகிகள் சேவுகமூர்த்தி, இளமுருகன், தர்மலிங்கம், முத்தரையர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.