/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையின் அழகுக்கு அ.தி.மு.க., திட்டமே காரணம் சொல்கிறார் செல்லுார் ராஜூ மதுரையின் அழகுக்கு அ.தி.மு.க., திட்டமே காரணம் சொல்கிறார் செல்லுார் ராஜூ
மதுரையின் அழகுக்கு அ.தி.மு.க., திட்டமே காரணம் சொல்கிறார் செல்லுார் ராஜூ
மதுரையின் அழகுக்கு அ.தி.மு.க., திட்டமே காரணம் சொல்கிறார் செல்லுார் ராஜூ
மதுரையின் அழகுக்கு அ.தி.மு.க., திட்டமே காரணம் சொல்கிறார் செல்லுார் ராஜூ
ADDED : ஜூன் 14, 2025 05:24 AM
மதுரை: மதுரை அழகாக காட்சியளிப்பதற்கு அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களே காரணம். நான்காண்டு தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் நடக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.
மதுரை அச்சம்பத்து அருகே மதுரை - தேனி ரோடு மந்தைத் திடலில் மேற்கு சட்டசபை தொகுதி நிதியில் இருந்து ரூ. 10 லட்சத்தில் மேற்கூரை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா செல்லுார் ராஜூ தலைமையில் நடந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செல்லுார் ராஜூ கூறியதாவது: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியது குறித்து பொதுச் செயலாளர் பழனிசாமிதான் பதில் அளிப்பார்.
பழனிசாமி குறித்து பொது நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் தகுதியற்ற முறையில் பேசுகிறார். மக்களிடத்தில் ஸ்டாலினுக்கு மதிப்பு இல்லை. பழனிசாமியின் செல்வாக்கு அதிகரிப்பதால்தான் வயிற்று எரிச்சலில் முதல்வர் பேசுகிறார். இது கண்டிக்கத்தக்கது.
மதுரை அழகாக காட்சியளிக்க அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களே காரணம். அப்போது ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க., அரசு தங்கள் லேபிளை ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றார்.