/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முருகபக்தர்கள் மாநாடு தீயசக்திகளுக்கு முற்றுப்புள்ளி பா.ஜ., செய்தி தொடர்பாளர் விமர்சனம் முருகபக்தர்கள் மாநாடு தீயசக்திகளுக்கு முற்றுப்புள்ளி பா.ஜ., செய்தி தொடர்பாளர் விமர்சனம்
முருகபக்தர்கள் மாநாடு தீயசக்திகளுக்கு முற்றுப்புள்ளி பா.ஜ., செய்தி தொடர்பாளர் விமர்சனம்
முருகபக்தர்கள் மாநாடு தீயசக்திகளுக்கு முற்றுப்புள்ளி பா.ஜ., செய்தி தொடர்பாளர் விமர்சனம்
முருகபக்தர்கள் மாநாடு தீயசக்திகளுக்கு முற்றுப்புள்ளி பா.ஜ., செய்தி தொடர்பாளர் விமர்சனம்
ADDED : ஜூன் 14, 2025 05:24 AM
மதுரை: ''சாதி, மதம், மொழி, இனத்தால் வேறுபடுத்தும் தீய சக்திகளின் தேர்தல் அரசியலுக்கு முருகபக்தர்கள் மாநாடு முற்றுப்புள்ளி வைக்கும்'' என, பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹிந்துவிரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும். இம்மாநாட்டுக்கு தி.மு.க., அரசு பல தடைகளை விதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இம்மாநாட்டை திட்டமிட்டு தடுக்கும் விதமாக தி.மு.க., அரசின் துாண்டுதலின் பேரில் பல்வேறு அமைப்புகள் டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன.
அவர்கள் ஹிந்து மதம், ஹிந்து கடவுள்கள் குறித்து இகழ்ந்து பேசுவதை போலீசார் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
மாநாட்டு அழைப்பிதழ் வினியோகிக்க போலீசார் தடை செய்கின்றனர். பக்தர்கள் மிரட்டி அச்சுறுத்தப்படுகின்றனர். நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த தமிழகம் எப்போதும் ஆன்மிக பூமி.
அன்னிய படையெடுப்புகளால் வடமாநிலங்களில் ஹிந்துகோயில்கள் இடிக்கப்பட்டாலும், தமிழத்தில் பலநுாறு ஆண்டுகளைக் கடந்த கோயில்கள் ஏராளம் உள்ளன.
பிரிவினை வாதம், வகுப்பு வாதம், மதவாதம் பேசி, சாதி, மதம், மொழியால் வேறுபடுத்தி ஹிந்துகளுக்கு எதிராக செயல்பட்ட தீய சக்திகளின் தேர்தல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எழுச்சித் திருவிழாவாக இம்மாநாடு நடக்க உள்ளது. இது வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.