ADDED : ஜன 06, 2024 06:04 AM
மதுரை: மதுரை தெற்குவெளி வீதி ரமேஷ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் உள்ளன. ஓராண்டாக பாதாளச்சாக்கடைக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது. இதற்காக தோண்டிய பள்ளங்களால் ரோடுகள் மோசமாக உள்ளன. கழிவுநீர் தேங்குகிறது. நோய்கள் பரவுகின்றன. விபத்துக்கள் ஏற்படுகின்றன.
கழிவுநீரை அகற்ற மாநகராட்சி தொழிலாளர்கள் வருவதில்லை. லஞ்சம் கேட்கின்றனர். மாநகராட்சி கமிஷனரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கழிவுநீரை அகற்ற வேண்டும். ரோடுகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்கள் ஒத்திவைத்தது.