/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம் சி.பி.ஐ., அலுவலர் மீது வழக்கு ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம் சி.பி.ஐ., அலுவலர் மீது வழக்கு
ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம் சி.பி.ஐ., அலுவலர் மீது வழக்கு
ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம் சி.பி.ஐ., அலுவலர் மீது வழக்கு
ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம் சி.பி.ஐ., அலுவலர் மீது வழக்கு
ADDED : ஜூன் 12, 2025 06:17 AM
மதுரை: மதுரையில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் 2022ல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார். இவர் மீதான வருமான வரி முறைகேடு தொடர்பான வழக்கில், ரூ.12 லட்சம் அவரது சகோதரர் வங்கி கணக்கில் இருந்து பெறப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ராமச்சந்திரனிடம், மதுரை சி.பி.ஐ., அலுவலக அலுவலர் தினேஷ்குமார் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ 2023ல் வெளியானது.
அதன் அடிப்படையில் தினேஷ்குமார் மீது மே 30 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்கு நாளை (ஜூன் 13) ஆஜராக, ராமச்சந்திரனுக்கு சி.பி.ஐ., சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.