/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமும் 100 வாக்காளர்களை சந்திக்க அ.தி.மு.க., மகளிரணிக்கு ‛'டார்கெட்' தினமும் 100 வாக்காளர்களை சந்திக்க அ.தி.மு.க., மகளிரணிக்கு ‛'டார்கெட்'
தினமும் 100 வாக்காளர்களை சந்திக்க அ.தி.மு.க., மகளிரணிக்கு ‛'டார்கெட்'
தினமும் 100 வாக்காளர்களை சந்திக்க அ.தி.மு.க., மகளிரணிக்கு ‛'டார்கெட்'
தினமும் 100 வாக்காளர்களை சந்திக்க அ.தி.மு.க., மகளிரணிக்கு ‛'டார்கெட்'
ADDED : ஜூன் 12, 2025 06:15 AM
மதுரை: ''மகளிர் அணி நிர்வாகிகள் தினமும் 100 வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரிக்க வேண்டும்'' என அ.தி.மு.க., மகளிரணி மாநில செயலாளர் வளர்மதி தெரிவித்தார்.
மதுரை நகர் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண்களின் நலனை கருத்தில் கொண்டு தாலிக்கு தங்கம், மகப்பேறு நிதி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.மகளிரணியை பலப்படுத்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 100 வாக்காளர்களை சந்தித்து அ.தி.மு.க., ஆட்சியின் சிறப்புகளை கூற வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு இது தான் 'டார்கெட்டாக' இருக்க வேண்டும்.
அப்படி செய்தால் ஒருத்தர் மூலம் 10 ஆயிரம் பேர் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பர். இதுவேதேர்தலில் வெற்றி வாய்ப்பை முடிவு செய்யும் என்றார்.
ஒன்றரை லட்சம் பெண்கள்
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசியதாவது: எம்.ஜி.ஆர்., காலம் முதல் அ.தி.மு.க.,விற்கு பெண் வாக்காளர்கள் அதிகம்.
தற்போது வரை கட்சியாக அல்லாமல் ஒரு குடும்பமாக இயங்கி வருகிறது.
பெண்கள் நினைத்தால் நாட்டின் ஆட்சியே கவிழ்ந்துவிடும். ஆண்கள் வீட்டின் வாசல் வரை சென்று தான் ஓட்டு கேட்க முடியும். பெண்கள் சமையலறை வரை செல்ல முடியும்.அ.தி.மு.க., ஆட்சியில் ஒன்றரை லட்சம் பெண்கள் நலத்திட்டங்களால் பயன்பெற்றனர்.
ஆனால் தி.மு.க., அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டு, மாதம் ரூ.1000 மட்டும் வழங்குகிறது என்றார்.